search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருசக்கர வாகனம்"

    • கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்த விஷ்ணுவர்தன் கல்லூரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது அவர் ஓட்டி வந்த பைக்கில் திடீரென தீப்பற்றியது.

    இருசக்கர வாகனத்தில் இருந்து விஷ்ணுவர்தன் உடனடியாக இறங்கினார். கடும் வெயில் காரணமாக பைக் முழுவதும் தீ வேகமாக பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் எரிந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    திருப்பத்தூரில் கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.
    • கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி - பஞ்செட்டி - திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மீஞ்சூரை அடுத்த வல்லூர் சந்திப்பில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களால் பொது மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது.

    இதனையடுத்து வல்லூர் சந்திப்பில் இருந்து மணலி, எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்களுக்கு சாலையில் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சரக்கு பெட்டக வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட தனி வழித்தடத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது மக்களின் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் துறைமுகம் நோக்கி செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்கு வரத்து நெரிசல் குறையும். சாலை யோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், சாகசங்கள் செய்தபடியும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் சாலை தடுப்புகளில் ஒளிரும் பட்டைகளை ஓட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீயணைக்கும் படையினர் மீட்டு வனத்துறையினரிட ம் ஒப்படைத்தனர்
    • பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள அஞ்சுகிராமம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் சந்தீபன் (வயது 23). இவர் சுற்றுலா வேன் டிரைவர் ஆவார். இவர் தனது மனைவியுடன் நேற்று மாலை கன்னியாகுமரிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்திருந்தார். இவர் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட வந்தார். அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுச்சூழல் பூங்காவை பார்வையிட சென்றார்.

    பூங்காவை பார்வையிட்டு விட்டு திரும்பி வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றார். அப்போது வாகனத்துக்குள் கொடிய விஷப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து அலறினார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி, நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருசக்கர வாகனத்திற்குள் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    அந்த பாம்பு சுமார் 6 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அவர்கள் அந்த பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த விஷப்பாம்பை பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    • பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள்.
    • பல பெண்கள் பயந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்க முடியும்.

    ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அலுவகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம், பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது.

    பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும். உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார்' போபியா' என்று பெயர். தொடர் முயற்சிகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். தற்போதைய காலத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இருந்தபோதும், பல பெண்கள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

    மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், பரம்பரையாக உண்டாகும் மரபணு மாற்றம், வாகனம் ஓட்டுவது பற்றிய எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.

    இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும் போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும் அத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியாக வியர்த்து கொட்டுவதால் உடல் குளிர்ந்து போவது, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது. குமட்டல், மூச்சுத்தினறல், நடுக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

    ''மோட்டார்போபியா' பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஒட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு குழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    முதலில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து பழகிய பின்னர், அந்த வாகனத்தை ஓட்ட முயற்சிக்கலாம். தொடக்கத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் பயணித்து பயத்தை போக்கிக்கொண்ட பிறகு, நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். "மோட்டார் போபியா' பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, விர்ச்சுவல் ரியாகிட்டி எக்ஸ்போஷர் தெரபி மற்றும் பதற்றத்துக்கான எதிர்ப்பு மருத்துகளை உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

    • வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம்-ரூ.27 ஆயிரம் கொள்ளை நடந்தது.
    • பெருங்குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் பழைய நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர் தனது மனை–வியின் பெயரில் உள்ள இரு சக்கர வாகனத்தை திறந்த நிலையில் உள்ள தனது காம்பவுண்ட் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார்.

    காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. காணாமல் போன இருசக்கர வாகன பெட்டிக்குள் ரூ.27 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, பேங்க் பாஸ்புத்தகம், செக் புக், லைசென்ஸ் ஆகிய பொருட் களையும் மர்ம நபர்கள் வண்டியுடன் சேர்ந்து திருடி சென்றிருந்தனர்.

    இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை மேற்கொண்டு வரு–கின்றனர்.

    மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் வலையங்கு–ளம் பகுதியில் உசிலம்பட்டி வடுகபட்டியைச் சேர்ந்த ராஜா (55). இவர் கடந்த ஐந்து வருடங்களாக திரு–மங்கலத்தில் உள்ள லாரி புக்கிங் ஆபீசில் டிரைவர் வேலை பார்க்கிறார். மதுரை சிந்தாமணி ரைஸ்மில்களில் தவிடு ஏற்றி உசிலம்பட்டி தேனி பகுதிகளில் இறக்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை நாலரை மணி அளவில் வலையங்குளம் பகுதியில் ஒட்டி வந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்க முயன்ற போது அங்கு வந்த வலையபட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (23) என்பவர் கத்தியை காட்டி ராஜா சட்டைபையில் வைத்திருந்த ரூ.300 பணத்தை எடுத்துக் கொண்டார்.

    மேலும் வெளியே சொன் னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென் றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜாவை பெருங் குடி போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • போலீஸ் துணை சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்
    • கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடக்கிறது

    கன்னியாகுமரி :

    தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பழனியாபிள்ளை, பாடகர் கண்டன்விளை ராஜேந்தி ரன் ஆகியோர் புற்றுநோய் விழிப்புணர்வு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் குறித்தும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்தும் மாநில அளவிலான மக்கள் நலத் திட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நடத்த முடிவு செய்தனர்.

    இதன் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது. போலீஸ் துணை சூப்பி ரண்டு மகேஷ்குமார் கொடி அசைத்து விழிப்புணர்வு பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி, மற்றும் கிருஷ்ண மூர்த்தி, சிலுவை வஸ்தியான், சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், உள்பட பல்வேறு கடலோர மாவட்டங்கள் வழியாக வருகிற 14-ந்தேதி சென்னை சென்றடைகிறது. 15-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெறுகின்றனர். பின்னர் இவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் வழியாக 22-ந் தேதி மீண்டும் கன்னியாகுமரியில்வந்து இந்த பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

    மொத்தம் 23 நாட்கள் 3ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப்படுகிறது. வழி நடுகிலும் பள்ளி கல்லூரி களில் மாணவர்களிடம் இவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தேரைக் கால் புதூர் பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதிய தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அந்தப்ப பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பலியானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
    • போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், வருகிற 26-ந் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டு விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.

    எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அயர்ந்து தூங்கியவரின் இருசக்கர வாகனம், செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

     ராஜபாளையம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான். இவரது மகன் அழகுராஜ். கட்டிட தொழிலாளி. இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பி கொண்டி ருந்தார்.

    அப்போது அவருக்கு சோர்வு ஏற்பட்டதால் ஆர்.ஆர்.விலக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்போனை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரோட்டோரமாக உள்ள மரத்தின் அடியில் படுத்து தூங்கி விட்டார். இதை பார்த்த மர்ம நபர்கள் அழகுராஜின் இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் திருடி சென்று விட்டனர்.

    தூக்கத்தில் இருந்து விழித்த அழகுராஜ், தனது இருசக்கர வாகனத்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ திருடி சென்றதை அறிந்த அவர் அது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டுபோனது
    • போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன பைக்கை தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் ஜமீன் குளத்தூர் ரவிச்சந்திரன் மகன் குமார்(வயது26).இவர் கயர்லாபாத் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டுமான பணி சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டுஅதிர்ச்சியடைந்ார். இச்சம்பவம் தொடர்பாக கயர்லாபாத் போலீஸ் ஸ்டேஷனில் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பைக்கை தேடி வருகின்றனர்.

    • காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாத 79 இருசக்கர வாகனங்கள் வருகிற 17- ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புபவர்கள் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அணுகி அங்கு ஏலத்தில் விட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம்.

    வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்றோ அல்லது ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் வரை வாகனங்களை பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்குள் முன்வைப்புத்தொகை ரூ.5 ஆயிரம் ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவாள் மட்டும் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ஏலம் நடக்கும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது முழு பொறுப்பில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    • கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
    • பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகன் ஞானப்பிரகாசம் (வயது 30).இவர் சம்பவத்த ன்று பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது அவ ரது மொபட்டை காணவி ல்லை.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×